தஞ்சாவூர்: வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், அதை தடுக்க முயற்சிக்கவில்லை என்று கூறி தமிழக அரசையும் கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று மாலை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை வகித்து பழனிசாமி பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததால், மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாத நிலை உருவானது. காவிரிப் பிரச்சினைக்கு சட்டப் போராட்டம் நடத்தி,நிலையான தீர்ப்பை பெற்றுத் தந்ததும் அதிமுகதான்.
ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து கேட்டுப் பெற திமுக அரசுக்கு திராணி இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை வஞ்சிக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் இருக்கும்வரை, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு குறித்து பேசவில்லை. அண்மையில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்த தீர்மானம் வந்தபோது, தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தோல்வியுற்று, பிரச்சினையை உருவாக்கிவிட்டனர்.
ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதிக்கொடுத்தால், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.திமுகஆட்சியில் விவசாயிகளுக்கு பயன்எதுவுமில்லை. மக்களைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago