பாஜகவுக்கு செல்ல முடிவா? - ஆவேசப்பட்ட திருநாவுக்கரசர்

By செய்திப்பிரிவு

திருச்சியில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரிடம், ‘‘திருச்சியில் இந்த முறை மதிமுக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதே?’’ என கேட்டதற்கு, ‘‘அதிக வாய்ப்பு என்று யார் சொன்னது? கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவேன்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது’’ என்றார். ‘பாஜகவில் நீங்கள் இணையப் போவதாக கூறப்பட்டதே?’’ என கேட்டபோது, ‘‘அப்படி சொல்பவரை செருப்பால் அடிப்பேன். இதுபோன்று கேள்வி கேட்டால், சீமான் மாதிரிதான் பதில் இருக்கும். 50 ஆண்டு அரசியல் இருக்கும் என்னிடம் இப்படி கேட்கலாமா? ஸ்டாலினை பார்த்து இப்படி நீங்கள் கேள்வி கேட்க முடியுமா?’’ என்றார்.

எம்.பி.யை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்படது குறித்த கேட்டபோது ஆவேசமடைந்த அவர், "நீ பொய் சொல்ற, நீ காசு வாங்கிட்டு சொல்ற, நான் 5 ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறேன். நீ யார் எனக்கு சர்டிபிகேட் தருவது? எல்லா எம்.பி.யும் அமெரிக்காவுக்கா போய்ட்டாங்க?; என்னை காணவில்லை என நீ எப்படி சொல்லலாம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்