தயாரிப்பாளர் ஆனது ஏன்? - பாடகர் பிரதீப் குமார் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மெட்ராஸ் படத்தில் வரும் ‘ஆகாயம் தீப்பிடிச்சா’, காலா படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’, கபாலியில் ‘மாய நதி’ உட்பட பல பாடல்களைப் பாடியிருப்பவர் பிரதீப் குமார். சில்லுக்கருப்பட்டி, அந்தகாரம், மேதகு, குதிரைவால் உட்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர், இப்போது ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற படம் மூலம் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இதை ‘எனக்குள் ஒருவன்' படத்தை இயக்கிய பிரசாத் ராமர் இயக்கியுள்ளார். செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு உட்பட பலர் நடித்துள்ளனர்.

பிரதீப் குமார் கூறும்போது, “இயக்குநர் பிரசாத் ராமர் , ‘எனக்குள் ஒருவன்’ படம் பண்ணும்போது, அதற்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணனுடன் நானும் பணியாற்றினேன். அப்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் அடுத்து படம் பண்ணும்போது சேர்ந்து பண்ணலாம் என்றார். இந்த ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்தது. நானும் என் மனைவி கல்யாணியும் இணைந்து தயாரித்துள்ளோம். இன்றைய இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.

பிரசாத் ராமர் கூறும்போது, “சிறு நகரத்தில் உள்ள இளைஞர்களைச் சுற்றி நகரும் கதை. மதுரையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மாயவரம் செல்கிறார்கள். அங்கு அவர்கள் நோக்கம் நிறைவேறியதா, இல்லையா என்பது படம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்