பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10 ஆக குறைப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது; பயணிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண முறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

கரோனா காலத்துக்கு பிறகு, விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்பட்ட சாதாரண பாசஞ்சர் ரயிலின் கட்டணம் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து மெமு,பாசஞ்சர் ரயில்களில் (குறுகிய தூர பாசஞ்சர் ரயில்) இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்துரூ.10 ஆக குறைக்கப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்சில்ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

பல மாதங்கள் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர், அப்போது ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, சாதாரண குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் கட்டணம் மாற்றப்பட்டு, விரைவு ரயில் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சாதாரண ரயில்களில் பயணிகள் பயணித்தாலும் விரைவு ரயில்களுக்கான கட்டணத்தை செலுத்தினர்.

தெற்கு ரயில்வேயில் 324 குறுகிய தூர பாசஞ்சர் ரயில்களும் சாதாரண கட்டண முறையை நீக்கி விட்டு, விரைவு ரயில் அல்லது சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் இயக்கப்பட்டது. இதனால், குறைந்தபட்ச கட்டணமே ரூ.30 கொடுத்து பயணம் செய்ய வேண்டிய இருந்ததாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

தென்மேற்கு ரயில்வே உள்ளிட்ட சில ரயில்வே மண்டலங்களில், குறுகிய தூர ரயில்களில் மீண்டும் சாதாரண கட்டண முறை சமீபத்தில் அமல்படுத்திய பிறகும், தெற்கு ரயில்வேயில் விரைவு கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குறுகிய தூரம்இயக்கப்படும் சாதாரண பாசஞ்சர்ரயிலின் கட்டணம் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மெமு, பாசஞ்சர் ரயில்களில் இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த அனைத்து ரயில்வே கோட்டங் களுக்கு தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, குறுகிய துார பாசஞ்சர் ரயில்களில் சாதாரண கட்டண முறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

இந்த வகை ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 -ல் இருந்துரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு மெமு விரைவு சிறப்பு ரயிலில் முன்பு குறைந்தபட்ச கட்டணம் ரூ.70 ஆக இருந்தது. தற்போது, இந்த ரயிலில் கட்டணம் ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில், அதிகபட்சமாக 200 கி.மீ., துாரம் வரை இயக்கப்படும் குறுகிய துார ரயில்களில் சாதாரண கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்