சூளகிரி அருகே 3 பேரை கொன்ற ஒற்றை யானை பிடிபட்டது: 3 மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்

By எஸ்.கே.ரமேஷ்

சூளகிரி பகுதியில் அடுத்தடுத்து 3 நாட்களில் 3 பேரைக் கொன்ற ஒற்றை யானையை வனத்துறையினர் நேற்று மயக்க ஊசிகளை செலுத்தி பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட போடூர்பள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த 18 வயதுடைய ஒற்றை யானை, கடந்த 22-ம் தேதி இரவு சூளகிரி பகுதி யில் செம்மண் குட்டையை சுற்றி வந்தது. தனது கூட்டத்துடன் சேர முடியாததால் ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த யானை, கடந்த 3-ம் தேதி காலை சின்னார் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த பந்தாரகுட்டையைச் சேர்ந்த ராஜப்பா(60) என்கிற விவசாயியை தாக்கிக் கொன்றது.

நேற்று முன்தினம் சூளகிரி அருகே தேவர்குட்டப்பள்ளி என்ற கிராமத்துக்குள் சென்ற யானை அங்கு முனிராஜ்(60) என்கிற விவசாயியை தூக்கி வீசி, தந்தத்தால் குத்தி கொன்றது. இதில் யானையின் தந்தம் உடைந்தது. யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் நேற்று முன்தினம் முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நேற்று காலை சூளகிரி அருகே ஒட்டையனூரில் முகாமிட்டிருந்த யானை, தோட்டத்தில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவன்(57) என்பவரை தாக்கி கொன்றது. அந்த யானை, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டையனூர் பகுதியில் சுற்றி வருவ தாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண் டல வன பாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.

நிபுணர்கள் விரைந்தனர்

யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா கால்நடை மருத்துவர் அருண்ஷா, ஓசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் மயக்க ஊசி பொருத்தப்பட்ட துப்பாக்கியுடன் அங்கு சென்றனர்.

மயக்க ஊசி

காலை 9.15 மணிக்கு முதல் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க மருந்து யானையின் உடலுக்குள் இறங்காததால், வேக மாக ஓடத் தொடங்கியது. யானையை பின்தொடர்ந்து வனத்துறையினரும் சென்றனர்.

ராமாபுரம் காப்பு காட்டில் முகாமிட்டிருந்த யானைக்கு 2-வது மயக்க ஊசி போடப்பட்டது. இதில் யானை தடுமாறி அமர்ந்தது. இதனால் வனத்துறையினர் யானையை பிடிக்க அருகே சென்றனர். திடீரென யானை விரட்டியதால், 3-வது மயக்க ஊசி போடப்பட்டது. 90 சதவீதத்துக்கு மேல் மயக்க நிலைக்குச் சென்ற யானையை 3 ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் வனத்துறைக்கு சொந்தமான வாகனத் தில் ஏற்றினர். இதையடுத்து, வனத்துறையினரின் 7 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஆக்ரோஷமாக இருந்த ஒற்றை யானை, பிடிக்கப்பட்ட தால் சூளகிரி சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

100 ஊழியர்கள்

யானையை பிடிக்க, தருமபுரி வனப்பாதுகாப்பு படை, ஓசூர் வனக்கோட்ட ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். யானைக்கு மயக்கம் தெளிய மருந்து செலுத்தி, வனப்பகுதியில் விட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

விரட்டிய யானை

ராமாபுரத்தில் காட்டு யானையை, வனத்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, திடீரென புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை, வெள்ளை நிற வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கினர். 200 மீட்டர் தூரம் விரட்டிய யானை, மீண்டும் புதருக்குள் சென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்