சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவிபத்தை ஏற்படுத்தாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்தில், கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசு, பாராட்டுசான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓர்ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநருடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளிநாணயப் பரிசு மற்றும் பாராட்டுசான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ந்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இவ்விழாவில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமேலாண்மை இயக்குநர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago