தி
ருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் யு.எஸ்.அன்புச்செழியன். இவர் உடுமலை அடுத்த கொங்கல்நகர் கிராமத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பராமரிக்கும் அன்பு இல்லத்தை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வரு கிறார்.
தொடக்கத்தில் வாடகைக் கட்டிடத்தில் 3 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெற்றோரால் பராமரிக்க முடியாத சூழலில் உள்ளவர்கள் இந்த மையத்தை நாடி வருகின்றனர். இதன் நிர்வாகத்தை கவனிப்பதோடு மட்டுமின்றி, தங்கியுள்ள குழந்தைகளுக்கு பல்தேய்த்து விடுவது, குளிக்க வைப்பது, முடி வெட்டிவிடுவது போன்ற பணிகளையும் செய்கிறார் அன்புச்செழியன்.
‘‘நாம் வாழும் சமூகத்துக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்ற உந்துதலே, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை அரவணைக்கும் அன்பு இல்லமாக உருவானது. 2010 முதல் இதை நடத்துகிறேன். இங்கு பராமரிக்கப்படும் 6 குழந்தை கள் அருகே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுப் பள்ளியில் படித்து வருகின் றனர்.
இங்குள்ள பலரும் தங்களது அத்தியாவசிய தேவைகளைக்கூட செய்துகொள்ள தெரியாதவர்கள். சிலர் ஊட்டிவிட்டால்தான் சாப்பிடவே செய்வார்கள். இவர்களைப் பராமரிக்க ஒருசில பெற்றோர் உதவுவார்கள். ஏழ்மை நிலையில் இருப்பவர்களால் உதவ முடிவதில்லை.
திருமணம், பிறந்தநாள் போன்ற நாட்களில் சிலர், குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு அளிக்கிறார்கள். மற்றபடி, வழக்கறிஞர் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து இந்த இல்லத்தை நிர்வாகம் செய்கிறேன். என் குடும்பத்தினர்தான் இப்பணியில் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இங்கு தங்கியிருப்பவர்களை கடவுளின் குழந்தைகளாகவே கருதி பராமரிக்கிறேன். அதில் எனக்கு மிகுந்த மனநிறைவும், நிம்மதியும் கிடைக்கிறது. மனவளர்ச்சி குன்றியவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவரிடமும் வரவேண்டும்’’ என்கிறார் அன்புச் செழியன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago