தூத்துக்குடியில் வியட்நாம் நிறுவனம் சார்பில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் ஆலை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்திஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, தூத்துக்குடி அருகேசில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைப்பதற்காக இந்நிறுவனத்துக்கு 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தென் தமிழகத்தின் முதலாவது மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையான வின்ஃபாஸ்ட்தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

விழாவுக்கு வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் தலைமை வகித்தார்.திட்டம் குறித்து தமிழக தொழில், வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கினார்.

சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்,மீன்வளத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் கூறியதாவது:

தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 50 நாட்களுக்குள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறோம். முதல்கட்ட பணிகள் ரூ.4 ஆயிரம்கோடியில் நடைபெறும். இதில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தூத்துக்குடி ஆலையில் இருந்து முதலாவது மின்சார கார் 2025-ம் ஆண்டின் மத்தியில் உற்பத்தியாகி வெளியே வரும்.

வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி: இங்கு உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகிறது. பெரிய கப்பல்கள் வந்துசெல்லும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும்.

மின்சார கார்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200முதல் 400 கி.மீ. தூரம் வரைசெல்லும். கார்களுக்கான பேட்டரியை வீடுகளிலும், வெளியே உள்ள மையங்களிலும் சார்ஜ் செய்யலாம்.

இந்தியாவில் மின்சார கார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்களை அதிக அளவில் அமைக்க, மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

துறைமுகம், விமான நிலையம், மனிதவளம், தமிழக அரசின் ஆதரவு போன்றவைசிறப்பாக இருப்பதால், தொழிற்சாலையை தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், சி.சண்முகையா, ஊர்வசி செ.அமிர்தராஜ், தமிழக தொழில், வர்த்தக துறை செயலர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குநர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி,வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன துணை தலைமை செயல் அதிகாரிகள் ஹோங் காங் தாங், நுகென் டாங்குவாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்