மதுரை: திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கால் பந்தாட்டப் போட்டிகள் மதுரையில் நடைபெற்றன. இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போருக்குத் தயாராவது போல், மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப் பணியாற்ற அதிமுக தயாராக உள்ளது. அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை. அவரது சர்ச்சை பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெறுப்படைந்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பொம்மைபோல் காட்சி அளிக்கின்றனர். அவர்கள் போல் அல்லாமல், இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் அதிமுக உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பார்கள்.
ஓ.பன்னீர் செல்வம் தலைவர் போல இல்லாமல், மேடைப் பேச்சாளர் போல் பேசி வருகிறார். அதிமுகவில் எம்எல்ஏவாக பதவி வகித்து பக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாமல் இருந்தவர்களை எல்லாம் பாஜகவில் சேர்த்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உதிர்ந்த இலைகள். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago