திருப்புவனம்: ‘திருப்புவனத்தில் இருந்து ராமர் கோயிலுக்கு ரயில் விடுங்க...’ எனக் கோரிக்கை வைத்த பெண்ணிடம், பிள்ளையார்பட்டிக்கு போம்மா... என கார்த்தி சிதம்பரம் எம்பி கூறி அப்பெண்ணை அதிரவைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பு வனத்தில் ஆட்டோ ஓட்டுநர் களுடன் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்துரையாடினார். அப்போது, ஆட்டோ தொழிலில் உள்ள சிரமம் குறித்து ஓட்டுநர்கள் எடுத்துக் கூறினர். அவர்களுடன் அமர்ந்து டீ, பிஸ்கெட் சாப்பிட்டார். பின்னர், ஆட்டோவில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்றார்.
தொடர்ந்து அங்கிருந்த மக்களிடம் மனுக்களை வாங்கி னார். அப்போது பெண் ஒருவர், ‘‘திருப்புவனத்தில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு ரயில் விட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். அப்போது கார்த்தி சிதம்பரம், ‘அங்கு எதுக்கு போறீங்க..? அது புதிதாக கட்டிய கோயில், பக்கத்தில் இருக்கும் பிள்ளையார்பட்டிக்கு போய் பாருங்க..! எனக்கூறி அந்த பெண்ணை அதிர வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago