ஜெயேந்திரர் மறைவிற்கு திருப்பதி தேவஸ்தானம் இரங்கல்

By என்.மகேஷ் குமார்

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலம் குன்றி இன்று (28.2.18) புதன்கிழமை காலை மரணமடைந்ததையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் இன்று காலை அவரது மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், அவர் பேசும் போது: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரருக்கும் திருமலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏழுமலையானுக்கு ஜெயேந்திரர் தங்கக் கிரீடம், பாதுகைகள், பூணூல் போன்றவற்றை காணிக்கையாக வழங்கி உள்ளார். மேலும் அவர் அடிக்கடி ஏழுமலையானை தரிசித்து தியானம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்து தர்மத்தை பெரிதும் பேணிக்காத்த மடாதிபதி ஜெயேந்திரர். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டும் என கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்