மதுரை: பொருளாதாரக் குற்றவியல் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி நியோ மேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தோருக்கு நிலங்களை ஒப்படைப்பு செய்யும் வகையில் சிறப்பு முகாம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் திரண்டனர்.
தமிழகம் முழுவதும் நியோமேக்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் என 25 நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரால், நியோமேக்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 107 பேர் மீது வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நியோ மேக்ஸில் முதலீடு செய்தோரின் பணத்துக்கு ஈடாக நிலங்களை ஒப்படைப்பு மூலம் பதிவு செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நியோ மேக்ஸ் வழக்கில் புகார் தெரிவித்த 1,404 புகார்தாரர்கள் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று முதல் 4 நாட்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி, முதலீடு செய்த பணத்துக்கு ஈடாக நிலங்களைப் பதிவு செய்து கொடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. இதில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 10 வழக்கறிஞர் குழுவினர் புகார் தாரர்களிடமிருந்து ஆவணங் களைப் பெற்றனர்.
இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அதேநேரம், நிலங்களைப் பெற விருப்பமில்லாத புகார் தாரர்கள் குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago