பூக்கள் சாகுபடி செய்வதை மட்டுமே நம்பியுள்ள மலர் உற்பத்தி விவசாயிகள் முகூர்த்த நாட்களையும், பண்டிகை தினங்களை நம்பியே வாழ்வாதாரத்தை நகர்த்த வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம் மாநகராட்சி பூ மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிப்பதால், விவசாயிகள் சில நேரங்களில் சொற்ப லாபமும், பல நேரங்களில் வெறுங்கையுடன் திரும்பும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மலர் சாகுபடியை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரளி, சாமந்தி, சம்பங்கி, காக்கட்டான், கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை விளைவித்து வருகின்றனர். வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளான திருமண வைபோகம், காது குத்து, கிரஹப்பிரவேசம், பண்டிகை காலங்களில் சாமிக்கு அலங்காரம் செய்ய சாமந்தி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிகளவு தேவைப்படுகிறது.
சேலம் பனமரத்துப்பட்டி, ஆட்டையாம்பட்டி, கடத்தூர், ஓமலூர், தொப்பூர், வீராணம், வலசையூர், வாழப்பாடி, அனுப்பூர், பூசாரிப்பட்டி, மன்னார்பாளையம் என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மலர் விவசாயம் நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் சேலத்தில் இருந்தே அரளிப் பூக்கள் அனுப்பப்படுகிறது. அரளிப் பூக்கள் நாளொன்றுக்கு 15 டன் வரையும் பிற பூக்கள் 10 டன் வரையும் சேலம் வஉசி மார்க்கெட்டுக்கு வருகிறது. இங்கு பூக்களை கொண்டு வரும் விவசாயிகளிடம் நுழைவு கட்டணமாக குண்டு மல்லிக்கு ரூ.20, சாமந்திக்கு ரூ.50, அரளிக்கு ரூ.100 என வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு விவசாயிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், சில நாட்கள் சொற்ப லாபத்துடன் செல்கின்றனர். நுழைவுக் கட்டணத்தைவிட பூக்களின் விலை குறைவாக உள்ள காலங்களில், குப்பையில் மலர்களை கொட்டிவிட்டு, வெறுங்கையுடன் விவசாயிகள் வீடு திரும்பும் சம்பவமும் நடக்கிறது.
இதுகுறித்து மலர் விவசாயிகள் கூறும்போது, ‘முகூர்த்த நாட்களையும், பண்டிகை தினங்களையும் மட்டுமே நம்பி மலர் சாகுபடி விவசாயிகள் வாழ்ந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மழை சரிவர பெய்யாமல், நிலத்தடி நீ்ர் இல்லாமல் பூக்கள் உற்பத்தி பெரும் சரிவை நோக்கிச் செல்கிறது. விசேஷ தினங்களில் மட்டுமே பூக்களுக்கு விலை கிடைக்கிறது.
தரகு கமிஷன், நுழைவு கட்டணம், போக்குவரத்து கட்டணம் என பல செலவு செய்து, பூக்களை விற்றுச் செல்லும்போது, உழைப்புக்கான கூலி கூட கிடைப்பதில்லை. மாநகராட்சி வஉசி மார்க்கெட்டில் பூ மூட்டைகளுக்கு பல மடங்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால், கிடைக்கும் சொற்ப வருமானத்தில், கூடுதல் செலவினத்தால் பாதிக்கப்படு sகிறோம். எனவே, மாநகராட்சி நி்ரவாகம் குத்தகைதாரர்கள் நியாயமான முறையில், சுங்க கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மலர் விவசாயிகளின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago