ராமேசுவரம்: வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகுகளின்ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் நடைமுறையை இலங்கை அரசு அண்மையில் அமல்படுத்தியது.
இதனடிப்படையில் தமிழக மீனவர் மெல்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்தும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று 6-வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி கடலுக்குச் சென்ற19 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், ``ஒரு படகின் உரிமையாளர் அன்றன் சசிக்குமார் படகின் ஓட்டுநராகவும் இருந்து சிறை பிடிக்கப்பட்டதால் அவரது படகை மட்டும் நாட்டுடமையாக்கப்படுகிறது. மற்றொரு படகின் ஓட்டுநர் ஜான்சன் (38) என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
» “தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பாசிச ஆட்சி” - அண்ணாமலை சாடல் @ மேல்மா போராட்டம்
» ஸ்டாலின் ‘அழைப்பு’ முதல் ‘மோடியின் மேற்கோள்’ வரை - கடைசி நாள் ஹைலைட்ஸ் @ பேரவை கூட்டத் தொடர்
மேலும், 18 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மற்றொரு படகின் உரிமையாளரான அலெக்ஸ் மே 14-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago