நெல்லை சந்திப்பில் பிப்.28 வரை ஏராளமான ரயில்கள் ரத்து

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு - மேலப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேறு சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் வருமாறு: தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி - தூத்துக்குடி, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. வாஞ்சி மணியாச்சியில் இருந்து காலை 11.05 மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பயணிகள் ரயில், திருச்செந்தூரில் இருந்து மதியம் 2.10 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு புறப்படும் பயணிகள் ரயில் ஆகியவை வரும் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு காலை 10 மணி, மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில்கள், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மதியம் 1.50 மணிக்கு புறப்படும் ரயில்கள் வரும் 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப் படுகின்றன. நாகர்கோவில் - திருநெல்வேலி இடையேயான பயணிகள் ரயில் வரும் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் 26-ம் தேதி இரவு 7.45 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலியில் இருந்து வரும் 25-ம் தேதி இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து வரும் 26-ம் தேதி காலை 8.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில், நாகர்கோவிலில் இருந்து வரும் 25-ம் தேதி மாலை 4.35 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்தாகும் ரயில்கள்: திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு பாலக்காடுக்கு புறப்படும் விரைவு ரயில் வரும் 28-ம் தேதி வரை, திருச்செந்தூர் - வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதியம் 2 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்து பாலக்காடுக்கு புறப்படும். மறுமார்க்கத்திலும் இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இடையேயான இண்டர் சிட்டி ரயில் பிப்ரவரி 22, 23 மற்றும் 24-ம் தேதிகளில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதே ரயில் வரும் 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும், கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் பயணிகள் ரயில் வரும் 28-ம் தேதி வரை சேரன்மகாதேவி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் முறையே காலை 10.03 மணி மற்றும் மாலை 6.34 மணிக்கு சேரன்மகாதேவியில் இருந்தே செங்கோட்டைக்கு புறப்பட்டுச் செல்லும்.

தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் 22, 23, 24, 25, 26 மற்றும் 27-ம் தேதிகளில் விருதுநகர் வரையே இயக்கப்படும். விருதுநகர் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் விருதுநகரில் இருந்தே மாலை 6.46 மணிக்கு தாம்பரத்துக்கு புறப்பட்டுச் செல்லும்.

நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு கோயம்புத்தூருக்கு புறப்படும் விரைவு ரயில், 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் செல்லும். இதுபோல், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் விரைவு ரயிலும் 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் திண்டுக்கல் வரையே இயக்கப்படும். இவ்விரு ரயில்களும் திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகின்றன.

பெங்களூருவில் இருந்து மாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் புறப்படும் விரைவு ரயில் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய நாட்களில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.15 மணிக்கு பெங்களூரு புறப்படும் விரைவு ரயிலும், நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து அதிகாலை 1 மணிக்கு பெங்களூருவுக்கு புறப்பட்டுச் செல்லும்.

ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் பயணிகள் ரயில் 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வரை செல்லும் ரயிலும் செங்கோட்டை - வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

பாலக்காடு - திருநெல்வேலி இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் கொல்லம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் கொல்லம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு பாலக்காடு புறப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் 23, 24, 25, 26, 27 மற்றும் 28-ம் தேதிகளில் திருநெல்வேலி - கொல்லம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்தில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும்.

மும்பை தாதரில் 22-ம் தேதி இரவு 8.40 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மதுரையுடன் நிறுத்தப்படும். கச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர ரயில் வரும் 23-ம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படும். 25-ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சியில் இருந்தே கச்சிகுடாவுக்கு புறப்பட்டுச் செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து வரும் 25-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு பிலாஸ்பூர் புறப்படும் அதிவிரைவு ரயில், திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று அதிகாலை 4.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

ஜாம்நகர் - திருநெல்வேலி விரைவு ரயில் 23, 24-ம் தேதிகளில் திருவனந்தபுரத்திலேயே நிறுத்தப்படும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் 26, 27-ம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு ஜாம்நகர் செல்லும்.

மும்பை தாதரில் இருந்து 24-ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலி புறப்படும் விரைவு ரயில் விருதுநகரில் நிறுத்தப்படும். இந்த ரயில் மறு மார்க்கத்தில் 26-ம் தேதி மதியம் 4,55 மணிக்கு விருதுநகரில் இருந்து தாதருக்கு புறப்பட்டுச் செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து 26-ம் தேதி மாலை 5.35 மணிக்கு புறப்படும்  மாதா வைஷ்ணவதேவி கத்ரா விரைவு ரயில் திருநெல்வேலி - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று இரவு 11.10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 25-ம் தேதி பகல் 12.05 மணிக்கு புறப்படும் ரயில் விருதுநகரில் நிறுத்தப்படும், இந்த ரயில் மறுமார்க்கத்தில் 26-ம் தேதி மாலை 5.15 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதருக்கு வரும் 28-ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்படும் அதி விரைவு ரயில், திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்று இரவு 9.50 மணிக்கு மதுரையில் இருந்து தாதர் புறப்பட்டுச் செல்லும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்