கோவை: இடையர்பாளையம் அருகே உள்ள சிவாஜி காலனியில் 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி கோரி அப்பகுதியினர் ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தராததை கண்டித்து வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, அப்பகுதி மக்கள் பேனர் வைத்துள்ளனர்.
இது குறித்து சிவாஜி காலனி விரிவாக்க நலச்சங்கத் தலைவரும், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலருமான நடராஜ் கூறும்போது, ‘‘சிவாஜி காலனி பகுதியில் சாலை மற்றும் முறையான சாக்கடை வசதி இல்லாததால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, கடந்த 8 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
» சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் விடுவிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு
» தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
இதனால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம். அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை திரும்பப் பெற்று வாக்களிப்போம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago