சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய நலனை கருத்தில்கொண்டு கடுமையான நிபந்தனைகளுடன் ஸ் டெர்லைட் ஆலையை இயக்கஅனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒத்துக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற வழக்கில் ஆலோசனை தெரிவித்துள்ளது.
மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட்ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும், அதற்கான காரணத்தையும் விளக்கிய பின்னர், உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது. ஸ்டெர்லைட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள்ஓராண்டு காலம் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டத்தில், மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருத்து இந்த உயிரிழப்புகளையும், படுகாயம் அடைந்த மக்களின் வலிகளையும், வேதனைகளையும் புறந்தள்ளுவதாகும். எனவே, தமிழக அரசுஇந்த ஆலோசனையை நிராகரிப்பதுடன் இதுவரையிலும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
» போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதத்தில் 358 பேர் கைது
» தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago