தமிழக வேளாண் பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிப்பை வாசிக்க தொடர்ந்து வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய அம்சங்கள்:

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.

தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.

பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.

ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.

இவ்வாறாக அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வழங்கி நிறைவு செய்தார். முன்னதாக அமைச்சர் பட்ஜெட் உரையை திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE