விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் பாஜகவில் சேர திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விளவங்கோடு தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருப்பவர், வழக்கறிஞர், திறமையாக, விவரமாக இருப்பவர். அவரை பிடிக்க பாஜக வீசும் வலையில் விஜயதரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதற்காக டெல்லி சென்றுள்ளார்.
அவரை பாஜகவில் சேர்க்க நினைக்கிறார்கள். அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, "பாஜகவில் இணைகிறீர்களா என்று அவரிடம் கேட்டதற்கு ஆமாம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. இவர் கட்சியிலிருந்து விலகுவதால் காங்கிரஸூக்கு எந்த பாதிப்பு இல்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago