சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உயர் மட்ட கண்காணிப்பு குழு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உயர் மட்டக் கண்காணிப்பு குழு விரைவில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை உட்பட பல்வேறு இடங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ஏராளமானோர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வேறு மாதிரியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சிகளில் சட்டவிரோத கட்டுமானங்களை கட்டுமானம் தொடங்கும் நிலையிலும், அனுமதி பெறாமல் வீடுகளை வர்த்தக பயன்பாட்டுக்கு மாற்றுவதையும் தடுக்கவும், கண்காணிக்கவும் உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இது தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், தமிழகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 2018-ல் சிறப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி தற்போது சென்னை மாநகராட்சியில் ஆணையர் தலைமையில் உயர் மட்டக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கடந்தாண்டு செப். 8-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற மாநகராட்சி/நகராட்சிகளில் விரைவில் உயர் மட்டக் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவுபடி சென்னை மாநகராட்சியில் விரைவில் உயர் மட்டக் கண்காணிப்பு குழு அமைத்ததற்காக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை நீதிமன்றம் பாராட்டுகிறது. பிற மாநகராட்சி/ நகராட்சிகளிலும் உயர்மட்டக் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை பிறப்பிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் உறுதியளித்துள்ளார். எனவே இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 4-க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்