ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி பயணம்: இந்த மாதத்தில் 2-வது முறை!

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் (பிப்.4ம் தேதி) தான் ஆளுநர் டெல்லி சென்று வந்தார். அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த ஆளுநர் டெல்லியில் உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் மூன்று நாள்களுக்கு தமிழகம் திரும்பிய ஆளுநர் பிப்.12ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சையானது.

இந்தநிலையில்தான் 4 நாட்கள் பயணமாக மீண்டும் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆளுநர். இதனால் அவரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE