தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம்: பனையூரில் இன்று நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் இன்று நடக்கிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். அடிக்கடி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் வழங்கி வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இதில், விஜய் உத்தரவின் பேரில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்