ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் நிடிசோ, கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடியைச் சேர்ந்த அனீஸ், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மீனவர் விஜய் ஆகிய 3 பேரும், குவைத் நாட்டுக்கு மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றச் சென்றனர். அங்கு சம்பளமின்றி மூவரும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர்.
இதனால் 3 மீனவர்களும் குவைத்திலிருந்து தப்பிப்பதற்காக, கடந்த மாதம் 28-ம் தேதி மீன்பிடிப் படகு மூலம் 10 நாட்கள் அரபிக் கடலில் பயணித்து,கடந்த 6-ம் தேதி மும்பை வந்து சேர்ந்தனர். அவர்களை மும்பை போலீஸார் கைது செய்தனர்.
இந்த 3 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து, தமிழக மீனவர்கள் 3 பேரும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago