தென்சென்னை தொகுதியில் 13 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கிளைகள் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 13 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கிளைகள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது, அந்தந்த பகுதியில் அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிர்வாகிகள் வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கம், அன்மைக்காலமாக அரசியல் நிகழ்வுகளில் தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக விஜய் அறிவித்தார். அன்றைய தினமே டெல்லியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.

விஜய் கட்சி ஆரம்பித்ததும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து கட்சிப் பணிகளில் அவரது ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கிளைகளை திறந்து வருகின்றனர்.

அந்தவகையில் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று 13 இடங்களில் புதிதாக கிளைகள் திறக்கப்பட்டன. இதில் மகளிர் அணி கிளைகளும் அடங்கும். தமிழக வெற்றிக் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் தி.நகர் அப்புனு தலைமையில் விருகம்பாக்கம், சேப்பாக்கம், தி.நகர் உட்பட 13 இடங்களில் கட்சியின் கிளைகள் திறக்கப்பட்டன. அப்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அன்னதானம், பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிர்வாகிகள் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்