2024-25 தமிழக பட்ஜெட் டீசரை வெளியிட்ட அரசு!

By செய்திப்பிரிவு

சென்னை: 2024-25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (திங்கள்கிழமை, பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், இதற்கான டீசரை அரசு வெளியிட்டுள்ளது. முன்னதாக, பட்ஜெட்டுக்கான லோகோ வெளியிடப்பட்டு இருந்தது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

இந்த சூழலில் 2024-25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். பிப்.20-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இதற்கான டீசர் வெளியாகி உள்ளது.

இதில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என குறிப்பிட்டு சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் முன்னிட்டவை ஹைலைட் செய்யப்பட்டுள்ளன. அதோடு காத்திருங்கள் பட்ஜெட் அறிவிப்புக்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE