கச்சத்தீவில் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற்ற புனித அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் இருந்து பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
கச்சத்தீவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருவிழாவில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 1532 ஆண்கள், 336 பெண்கள், ஆண் குழந்தைகள் 29 பேர், பெண் குழந்தைகள் 23 பேர் என 1,920 இந்திய பக்தர்கள் பங்கேற்றனர். இவர்கள் சனிக்கிழமை மாலை ராமேசுவரம் திரும்பினர்.
2015-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கச்சத்தீவு விழாவில் 112 விசைப்படகுகளில் 4,003 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 2016-ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற விழாவில் 96 படகுகளில் 3,249 பேர் அனுமதிக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் கச்சத்தீவில் நடந்த விழாவில் 145 விசைப்படகுகளில் சுமார் 5,000 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர். ஆனால், 6.3.2017 அன்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், தமிழக மீனவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற கச்சத்தீவு விழாவைப் புறக்கணித்தனர்.
கடந்த ஆண்டுகளில் கச்சத்தீவு விழாவில் பங்கேற்ற இந்திய பக்தர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது நடப்பாண்டில் 50 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் சிங்கள பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கச்சத்தீவில் இந்தியாவிலிருந்து சென்ற பக்தர்களுக்கும், இலங்கையிலிருந்து படகுகளில் சென்ற பக்தர்களுக்கும் ஒரே படகுத்துறை பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள பக்தர்கள் பெரும்பாலும் இலங்கை கடற்படை படகுகள் மூலமாக கச்சத்தீவு வந்துள்ளனர்.
சிங்கள மக்கள் அதிகளவில் கலந்து கொண்டதால் கச்சத்தீவு திருவிழாவில் முதன்முறையாக சிங்கள மொழியில் திருப்பலி நடைபெற்றது. சிங்கள மொழியில் திருப்பலியை காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே நடத்தினார். சிங்கள பக்தர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிப்பதற்காக இந்திய பக்தர்களின் எண்ணிக்கையையும், இலங்கை தமிழர் பக்தர்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இலங்கைத் தமிழர்கள் கச்சத்தீவு விழாவுக்கு வருவதற்காக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவு படகுத் துறைகளில் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், திடீரென சிங்கள பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் படகுகளுக்காக காத்திருந்து, விழாவில் கலந்துகொள்ள முடியாமல் திரும்பியதாகவும் இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த முறை கச்சத்தீவு விழாவில் இலங்கை கடற்படையினருடன் சேர்ந்து இலங்கை காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago