சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை மிக கடுமையாக எதிர்க்கவேண்டும், தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது’ ஆகிய 2 தனித் தீர்மானங்களை வரவேற்று, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அவர்கள் மீது நடத்தப்பட்ட மத்திய பாஜக அரசின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
பதவி உயர்வில் ‘200 பாயின்ட்ரோஸ்டர்’ முறை ரத்து செய்யப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தரவரிசை கடைபிடிக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக எஸ்.சி. பிரிவினருக்கு உயர் பதவிகளில் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படுகிறது.
அரசமைப்பு சட்டப்பிரிவு 16 (4ஏ)-ன்படி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதை பயன்படுத்தி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் சட்டம் நிறைவேற்றியுள்ளன. அதுபோல தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
» மராத்தா சமூகத்தினருக்கான இடஓதுக்கீடு: அறிக்கை தாக்கல் செய்தது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
» காங்கிரஸ் ஆட்சியின் சாதனை ஊழல், தீவிரவாதம்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago