மூன்று - ஒன்று - நான்கு... விசிகவின் விருப்ப நம்பர்!

By செய்திப்பிரிவு

கடந்த மக்களவைத் தேர்தலில், பானை சின்னத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், உதயசூரியன் சின்னத்தில் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் களம் கண்டனர். தற்போது பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என விசிக உறுதி செய்துள்ளது.

அதேநேரம் 3 மக்களவைத் தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டு பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 தொகுதிகளின் விருப்பப் பட்டியலையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 12-ம் தேதி திமுகவுடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முன்தினமான 11-ம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையொட்டி, அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விசிக தலைமை நிலையச் செயலாளர் அ.பாலசிங்கம் கூறும்போது, "இதுவரை எந்த பட்டியலும் தயாரிக்கப்படவில்லை. 12-ம் தேதி பேச்சுவார்த்தையையொட்டி, தொகுதிகள் முடிவாகும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்