புதுச்சேரி: புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் ( 28 ). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், சூரமங்கலத்தைச் சேர்ந்த தீபா ( 26 ) என்பவருக்கும், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தீபா பிரசவத்துக்காக எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனையில் பிப். 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தீபாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில், சிறிது நேரத்தில் தீபாவும், குழந்தையும் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் 50-க்கும் மேற்பட் டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மருத்துவர்கள், ஊழியர்களின் அலட்சியத்தால் 2 உயிர்கள் பறிபோனதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
ரெட்டியார் பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார், சப் - இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீஸார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உயிரிழந்த தீபாவின் உறவினர்கள், மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியோ, மக்கள் தொடர்பு அதிகாரி நாராயணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்வை யிட்டு தவறு செய்தவர்கள் மீது உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து தீபாவின் உடல் கதிர் காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago