டெல்லி/சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர், தொழிற்சங்க நிர்வாகி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர், முன்னாள் எம்.பி. ஒருவர் என மொத்தம் 16 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தலைமையிடம் ஆலோசிக்க அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு, பாஜக தலைவர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசியல், கூட்டணி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.
வரும் 11-ம் தேதி சென்னையில் நடைபெறும் என் மண் என் மக்கள் நடைபயணத்திலும், அதன் பிறகு நடக்கும் பொதுக்கூட்டத்திலும் ஜெ.பி.நட்டா கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அது தொடர்பாகவும் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பிறக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது. சமீபத்தில், சேலம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ எஸ்.இ.வெங்கடாசலம், கன்னியாகுமரி முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
» பேடிஎம் வங்கி மீதான தடை விவகாரம்: நிர்மலா சீதாராமனுடன் பேடிஎம் சிஇஓ சந்திப்பு
» லட்சத்தீவு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.3,600 கோடி ஒதுக்க திட்டம்
இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி. என 16 பேர் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் தங்களை பாஜகவில் நேற்று இணைத்துக் கொண்டனர்.
அதன்படி, கரூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.வடிவேல், கோவை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சேலஞ்சர் துரைசாமி, பொள்ளாச்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம்.வி.ரத்தினம், சிங்காநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளருமான ஆர்.சின்னசாமி, அரவக்குறிச்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பி.எஸ்.கந்தசாமி, தேனி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.ஆர்.ஜெயராமன், வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சர் கோமதி சீனிவாசன், வேடசந்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ எஸ்.எம்.வாசன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
மேலும், ஆண்டிமடம் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.தங்கராஜ், புவனகிரி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பி.எஸ்.அருள், பாளையங்கோட்டை முன்னாள் திமுக எம்எல்ஏ எஸ்.குருநாதன், காங்கேயம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ செல்வி முருகேசன், திட்டக்குடி முன்னாள் தேமுதிக எம்எல்ஏ கே.தமிழழகன், காட்டுமன்னார் கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன், கொளத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஏ.ரோகிணி மற்றும் முன்னாள் சிதம்பரம் திமுக எம்.பி. குழந்தைவேலு உள்ளிட்ட ஒரு முன்னாள் எம்.பி. 15 முன்னாள் எம்எல்ஏக்கள் என 16 பேர் நேற்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
பாஜகவில் இணைந்தவர்களை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, மக்களவை தேர்தல் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகசட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago