பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில் கைதான பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தங்களது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கடந்த ஜன.25 அன்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் சென்னை வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த பிப்.2 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆண்டோ மதிவாணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், அந்த பணிப்பெண்ணின் கல்வி செலவுக்காக மனுதாரர்கள் ரூ. 2 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். எம்எல்ஏ மகன் என்ற ஒரே காரணத்துக்காக சமூக ஊடகங்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீஸார் அவசர கதியில் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர் என வாதிட்டார்.

அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் வாதிட்டதாவது: வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள இந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கை ஆய்வாளர் தான் விசாரித்து வருகிறார்.

இருவரையும் போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் உள்ளநிலையில் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அரசியல் பின்புலமிக்கவர்கள். பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதால் போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த வழக்கின் தீர்ப்பை பிப்.6-க்கு தள்ளி வைத்திருந்தார். அதன்படி இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்