எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு: அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக, அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. ஒரு நூற்றாண்டு கடந்த இந்த நிலையத்தை பல்வேறு நவீன வசதிகளுடன் உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் இடிப்பு, மரங்கள் அகற்றுதல் பணி முடிந்த பிறகு, அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

இந்நிலையில், இந்தப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காந்தி இர்வின் சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, இங்கு அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி 100 சதவீதமும், அடித்தளம் அமைக்கும் பணி 80 சதவீதமும் நிறைவடைந்துள்ளன.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அடித்தள கம்பிகள் அமைக்கும் பணி 85 சதவீதமும், அடித்தளப் பணி 33 சதவீதமும் நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை பக்கத்தில் பார்சல் அலுவலகம் அமைக்கும் பணியில், 75 சதவீத அடிக்கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காந்தி இர்வின் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.பார்சல் அலுவலகத்தை புதிய இடத்துக்கு மாற்றும் பணியும் நடைபெறுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் காந்தி - இர்வின் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக இடம் அமைக்கும்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

பூமிக்கு அடியில் பல அடிஆழத்தில் கம்பிகளை பதித்து, அடித்தளம் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. எழும்பூர் காந்தி இர்வின் சாலையை ஒட்டி, எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்