இமாச்சல பிரதேசத்தில் சட்லெஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் மாயம்

By செய்திப்பிரிவு

சென்னை: இமாச்சல பிரதேசம் சட்லெஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். அதில் பயணம் செய்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை. அவரது நண்பர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மாநகராட்சி மேயர், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சைதை துரைசாமி. எம்ஜிஆரின் தீவிர ரசிகர் இவர். எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். இவர் மனிதநேய அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

இவரது மகன் வெற்றி (45), அண்மையில் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். உடன், ஈரோட்டை சேர்ந்த நண்பர் கோபிநாத் என்பவரையும் அழைத்து சென்றுள்ளார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. அப்போது சுமார் 50 அடி பள்ளத்தில் கார் உருண்டு சென்றுள்ளது. கார் நீரில் மூழ்கியதால் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சைதை துரைசாமி மகன் வெற்றியை காணவில்லை. அவரை தேடும் பணியில் அம்மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சைதை துரைசாமி, இமாச்சல பிரதேசம் விரைந்துள்ளார்.

வன உயிரினங்கள் மீது ஆர்வம்: வன உயிரினங்களை படம் எடுப்பதில் வெற்றி அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவ்வப்போது வனப்பகுதிகளுக்கு சென்று, அங்கேயே தங்கி இருந்து படங்களை எடுத்து வருவது வழக்கம். அவர் எடுத்த படங்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். அவர், இமாச்சல பிரதேச பகுதியில் வாழும் பனிக் கரடிகளின் வாழ்வியலை புகைப்படமாக பதிவு செய்யவே அங்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது திருமணம் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. திரைப்பட இயக்குநரான அவர், கடந்த 2021-ம் ஆண்டு ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு கிரைம் திரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர், விபத்தில் மாயமாகி இருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது திரைத் துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்