கோவை: மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் ( கோவை மாநகர் ), தொ.அ.ரவி ( கோவை வடக்கு ), தளபதி முருகேசன் ( கோவை தெற்கு ) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில், குழு உறுப்பினர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்பிக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏக்கள் எழிலரசன், கோவி.செழியன், எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் வரும் 10-ம் தேதி கோவை வருகின்றனர்.
பீளமேடு, அவிநாசி சாலையில் உள்ள விஜய் எலான்சா ஹோட்டல் அரங்கில், தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைப் பெறவுள்ளனர்.
10-ம்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கோவை மாநகர் மாவட்டத்துக்குட்பட்டவர்கள், காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் கோவை வடக்கு மாவட்டத்துக்குட்பட்டவர்கள், மதியம் 12 மணி முதல் 1 மணிவரை கோவை தெற்கு மாவட்டத்துக்குட்பட்டவர்களிடம் கோரிக்கைகள் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago