கஞ்சா வழக்குகளை கையாள தனி அதிகாரி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

By கி.மகாராஜன் 


மதுரை: கஞ்சா வழக்குகளை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்காக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் நாகூர்கனி. இவர் 2018-ல் கஞ்சா கடத்தல் வழக்கில் போலீஸார் பறிமுதல் செய்த ஜீப்பை திரும்ப ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்தியாவில் தமிழகத்தில் முதன் முறையாக மாநில அளவில் விசாரணை அதிகாரி மற்றும் மாவட்ட அளவில் போதை பொருள் வழக்குகளை விசாரிக்கவும், கண்காணிக்கவும் 7 ஏடிஎஸ்பிக்கள், 11 உதவி ஆணையர்கள், 30 டிஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படும் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதிகள் தண்டனை பெறுகிறார்களா? விடுதலை செய்யப்படுகிறாரகளா என்பதை தொடர்ந்து கண்காணிப்பாளர்கள். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதி, உச்ச நீதிமன்ற கடந்த 2013 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. வேறு எந்த மாநிலங்களில் இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள். மேலும் அதிகாரிகள் இந்த வழக்கை எவ்வாறு கையாள உள்ளார்கள்? என்ன சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது? என உத்தரவிட்டு குறித்து விரிவான அறிக்கையை பிப்ரவரி 12 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE