அண்ணாமலை கோவையில் போட்டியா? - எல்.முருகன் விளக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், ஆலோசனைக் கூட்டங்கள்தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக தேசிய தலைவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கிவருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பினால், களப் பணியாற்ற கட்சியினர் தயாராக உள்ளனர்.

திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக 3-வது அணி அல்லது மற்ற கட்சிகள் தமிழக தேர்தலில் சாதிக்க முடியாது என்பது தவறான கருத்து. 2014 தேர்தலில் நாங்கள் 19 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன், கன்னியாகுமரி, தருமபுரியில் வெற்றியையும் பதிவு செய்தோம். தேசத்துக்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுள்ளதை என்ஐஏ சோதனை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE