மதுரை: விவசாய பம்பு செட் மோட்டாரில் விழும் தண்ணீர் போல், மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் குழாயில் இருந்து நேரடியாக மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் விடப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வைகை ஆறு மதுரையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. நகர்பகுதியில் இந்த ஆறு 12 கி.மீ., தொலைவிற்கு ஓடுகிறது. கடந்த காலங்களில் ஆண்டு முழுவதுமே வற்றாத ஜீவநதி போல், வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலப்போக்கில் காலநிலை மாற்றத்தால் மழைநீர் பொழிவு குறைவு, கிளை நதிகள் திசைமாற்றம், மழைநீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு போன்வற்றால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது.
மற்ற நாட்களில் மழை பெய்யும்போது சிற்றோடை போல் ஒரு ஓரமாக தண்ணீர் செல்கிறது. அதோடு, மாநகராட்சி பகுதிகளில் திறந்துவிடப்படும் கழிவுநீர், ரசாயன கழிவுநீர் போன்றவையும் சேர்ந்து வைகை ஆறு, மதுரை நகர் பகுதியில் கழிவு நீரோடையாக நகர்பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க, கடந்த 25 ஆண்டாக மதுரை மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாநகராட்சியிடம் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், ஆற்றை பாதுகாக்க வேண்டிய மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, மாநகராட்சி ஆகியோர் இணைந்தே ஆற்றின் அழிவதற்கு காரணமாகி வருகிறார்கள்.
கடந்த சில நாளாக மதுரை அண்ணா நகர் குருவிக்காரன் சாலை அருகே உள்ள மாநகராட்சி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து குழாய் மூலம் பகிரங்கமாக ஆற்றில் கழிவு நீர்திறந்துவிடப்படுகிறது. அதனால், அப்பகுதியில் வைகை ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பகுதியில் கடும் தூர்நாற்றம் ஏற்படுகிறது. இதுபோல் விளாங்குடி அருகேயும் மாநகராட்சி கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து கழிவுநீர் திறந்துவிடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாலை நேரங்களில் விவசாய பம்பு செட் மோட்டார் குழாயில் விழும் தண்ணீரைப் போல் அதிகமாகவும், மற்ற நேரங்களில் சீராகவும் கழிவு நீர் தொடர்ச்சியாக வைகை ஆற்றில் திறந்து விடப்படுவதால் மதுரை நகர் பகுதியில் ஓடும் வைகை ஆற்றின் வளம் பாதிக்கப்படுகிறது.
» திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக பங்கேற்பு
» தமிழ்நாட்டின் சிறந்த கோயில் யானை - கும்பகோணம் மங்களம் தேர்வு!
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ''கடந்த அதிமுக ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' போர்வையில் மாநகராட்சி ஆற்றை சுருக்கி, அதன் இரு கரைகளிலும் பிரமாண்ட நான்கு வழிச்சாலைகளை அமைத்துவிட்டனர். ஆனால், அந்த சாலைப்பணி தற்போது வரை நிறைவு பெறாததால் இந்த திட்டத்திற்கு மாநகராட்சி சார்பில் செலவு செய்த ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத்துறை செலவு செய்த ரூ.300 கோடியும் விரயமானதுதான் மிச்சம். தற்போது நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை இந்த சாலை எந்த வகையிலும் குறைக்கவில்லை.
தற்போது ஆற்றில் மாநகராட்சியே திறந்துவிடும் கழிவு நீரை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை போன்ற அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாகவும், தனியார் ஆக்கிரமிப்பாகவும் மாறி வருகிறது. தேனி மாவட்டத்தில் தொடங்கும் வைகை ஆறு, சங்கிலி தொடராக அதன் வழித்தடங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி கடைசியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு செல்கிறது. ஆற்றை காப்பாற்ற வேண்டிய தமிழக அரசும் தொடர்ந்து மவுனம் காப்பது, காலப்போக்கில் இந்த வழித்தடமும் அழிந்தாலும் ஆச்சரியம் இல்லை,'' என்றார்.
இதுகுறித்து மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி குணசேகரிடம் கேட்டபோ, ''நான் பொறுப்பிற்கு வந்தபிறகு தற்போதுதான் என் கவனத்திற்கு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago