டெக்னீஷியன் என பதிவு செய்ய எதிர்ப்பு - தமிழகத்தில் பிசியோதெரபி துறை நசுக்கப்படுகிறதா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பிசியோ தெரபிஸ்ட்கள், லேப் டெக்னீஷியன்கள், ஆக்கு பேஷனல் தெரபிஸ்ட் என 10 துறைகளை உள்ளடக்கி மாநிலத் தொடர்புடைய மற்றும் சுகாதாரத் தொழில்கள் ( State Allied And Healthcare professions ) கவுன்சில் அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக 2023-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டது.

2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்தது போன்றே பிசியோ தெரபி ஸ்ட்களை கலந்து ஆலோசிக்காமல் பிசியோதெரபி துறை சம்பந்தப்பட்ட விதிமுறைகளை தற் போதும் மாநில அரசு அறிமுகப் படுத்தி உள்ளது. நான்கரை ஆண்டு பட்டப்படிப்பு படித்த பிசியோ தெரபிஸ்ட்டுக்கு டெக்னீஷியன் என பதிவுச் சான்றிதழ் வழங்க இருப்பதாக இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலில் உறுப்பினராக பிசியோ தெரபிஸ்ட்கள் பதிவு செய்ய அலோபதி மருத்து வரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிசியோ தெரபிஸ்ட்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இது குறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோ தெரபிஸ்ட்கள் தமிழ்நாடு கிளைத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: பிசியோ தெரபி துறையின் வளர்ச்சி மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை யென்றால் தமிழகத்தில் உள்ள பிசியோதெரபி கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்து அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத சில விதிமுறைகளை இங்கு அறிமுகம் செய்துள்ளனர்.

தேசிய அளவில் உள்ள இதே அலைய்டு அண்டு ஹெல்த்கேர் புரபொஷன்ஸ் கவுன்சில் சட்டத்தில் பிசியோதெரபிஸ்ட் ஆக பதிவு செய்ய B. P. T ( பிசியோ தெரபி பட்ட படிப்பு ) குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட விதி முறைகளில் Diploma in Physiotherapy கல்வித் தகுதியும் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக நீக்க வேண்டும்.

மக்களின் உடல்நலப் பாதுகாப்புக்கு கவுன்சிலின் சட்ட திட்டங்கள் மிகவும் அவசியம் என்பதை சிந்தித்துப் பார்க்க தமிழக சுகாதார துறை முன் வர வேண் டும். நோயாளிகளுக்கு தங்களது உடல் நலப் பிரச்சினைகளுக்குத் தேவையான மருத்துவ முறை களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தடை செய்யும் வகையில் இதில் இடம் பெற்றுள்ள சரத்துகள் அர்த்தப்படுத்துகின்றன.

மருந்துகள் மற்றும் அலோபதி மருத்துவர்களைச் சார்ந்து மட்டுமே ஒட்டுமொத்த மருத்துவத் துறை முடங்கி விடக் கூடாது என்றும் பிசியோதெரபி போன்ற உடல்நலப் பாதுகாப்புத் துறைகளின் பங்களிப்பை மக்களுக்கான பொது மருத்துவ சேவை வழங்கலில் அதிகப்படுத்த ஹெல்த் கேர் என்ற உரிய அங்கீகாரம் வழங்கி 2012-ம் ஆண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை கொள்கை முடிவை எடுத் தது.

டெக்னீஷியன், பாராமெடிக்கல் என்ற வார்த்தைப் பயன்பாட்டை தடை செய்து `ஹெல்த் கேர்' என்ற தகுதி நிலைக்கு உயர்த்தி பிசியோதெரபி துறைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப் படையில் பிசியோதெரபி உட்பட 56 துறைகளை உள்ளடக்கி தேசிய அளவில் நேஷனல் கமிஷன் ஃபார் அலைய்டு அண்டு ஹெல்த் கேர் புரபொஷன்ஸ் ( NCAHP Act 2021 ) சட்டம் இயற்றப்பட்டது.

வெ.கிருஷ்ணகுமார்

பிசியோ தெரபி துறையில் உள்ள நவீன வளர்ச்சி, எதிர்கால வளர்ச்சியைச் சார்ந்து நேஷனல் கமிஷன் ஃபார் அலைய்டு அண்டு ஹெல்த்கேர் புரபொஷன்ஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிசியோதெரபி துறைக்கான விளக்கத்தை ஏற்றுக்கொண்டு உரிய திருத்தங்களை தமிழக அரசின் விதி முறைகளில் கொண்டு வர வேண்டும். பிசியோ தெரபி பிரதிநிதிகளை அழைத்து கலந்து ஆலோசித்து பிசியோ தெரபிஸ்ட்கள் சம்பந்தப் பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.

கவுன்சில் குறித்தும் பிசியோ தெரபி துறை சந்திக்கும் பல்வேறு கொள்கை சார்ந்த சவால்களையும் முறையான வழியில் அரசுத் தரப்புக்குத் தொடர்ந்து தெரிவித்து கொண்டிருந்தும் அரசுத் தரப்பில் எவ்வித செவிசாய்ப்பும் இல்லா மல் பிசியோதெரபி துறை தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வருகிறது. அரசின் இந்த மெத்தனப் போக்கின் நீட்சியாகவே இந்த கவுன்சிலில் தெரிவித்துள்ள விதி முறைகள் வெளி வந்துள்ளன.

தமிழ்நாடு மருத்துவ நிறு வனங்கள் ஒழுங்கு முறைச் சட்டத்தில் பிசியோ தெரபி கிளினிக் பதிவதில் உள்ள முரண்பாடுகள், தனித்த பிசியோ தெர பிஸ்ட்களின் பதிவுக்காக தற்போது அறிமுகப்படுத்தியுள்ள விதிமுறைகள் என தமிழகத்தில் பிசியோ தெரபி துறை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்தச் செயல்பாடுகள் பிசியோ தெரபி மருத்துவர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய பிசியோ தெரபி மருத்துவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை தமிழக அரசு உடனடியாகச் சரி செய்யத் தவறும் பட்சத்தில் சான்றிதழ் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE