சென்னை: தொலைதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க, tnstc.in இணையதளம் மற்றும் tnstc செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்பதிவு செய்து வார நாட்களில் (பண்டிகை நாட்கள், வெள்ளி,சனி, ஞாயிறு நீங்கலாக) பயணிப்பவர்களில் 3 பேரை தேர்வு செய்து, தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வார நாட்களில் அரசு பேருந்துகளில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில்,வார நாட்களில் விரைவு பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 3 பேரை கணினி குலுக்கல் முறையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தேர்ந்தெடுத்தார்.
அதன்படி, இசக்கி முருகன், சீதா,ஆரிப் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய அமைச்சர், ‘‘அரசு விரைவு பேருந்து சேவையை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். தேர்வானவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago