புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்ற ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம்: அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக ‘அன்மாஸ்க் கேன்சர்’ ((புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை வழங்குதல்) திட்டத்தை சென்னை தரமணி யில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் மருத்துவமனையின் மார்பகம், தலை, கழுத்துபிரிவு இயக்குநர் சப்னா நாங்கியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும், தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவதற்காகவும், சமூகத்துக்குள் புற்றுநோயாளிகள் மீது புரிதலை வளர்ப்பதற்காகவும், புற்றுநோயாளிகள் மனரீதியாக பாதிக்கப் படுவதைத் தவிர்க்கவும் ‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தங்களது வாழ்க்கை முறை, குடும்பத்தின் ஆதரவு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன், புற்று நோயில் இருந்து மீண்டு உயிர் வாழும் நபர்களுக்கு எதிரான பாகு பாடு, உதாசீனம், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை நீக்கி, மனம் மற்றும் உணர்வு ரீதியிலான நலத்தில் கவனம் செலுத்த, இத்திட்டம் பெரிதும் உதவும்.

இதற்காக, https://www.apollohospitals.com/cancer-treatment-centres/unmask-cancer/ என்ற இணையதளத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்