“2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள்” - விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த சூழலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது வாழ்த்து செய்தியை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய்யை, கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார். ‘இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகளும்’ என தெரிவித்தார்” என்று அக்கட்சி அதில் குறிப்பிட்டுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதன் பிறகு நடிப்பதிலிருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்