ஹபக் லாய்டு நிறுவனத்துடன் சரக்கு முனையம் அமைப்பு: ரூ.2500 கோடி முதலீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்பெயினின் ஹபக் லாய்டு நிறுவனத்துடன், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்க ரூ.2500 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலையளிக்கும் ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக கடந்த ஜன. 27-ம் தேதி ஸ்பெயின் சென்றார். அங்கு பல முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

தமிழகத்தின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தை திறமையாக கையாள்வது மிகவும்அவசியமானதாகும். அந்த வகையில்,சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப், இயக்குநர் ஆல்பர்ட் லாரன்ட் ஆகியோர் ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, கடந்த ஜன.31-ம் தேதி சந்தித்து பேசினர்.

அப்போது, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில், ரூ.2500 கோடி முதலீட்டில், தூத்துக்குடிமற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்கஇந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீடு மூலம்1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன், தமிழகத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

இதைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸின் சர்வதேச மற்றும் நிறுவன தொடர்பு தலைமை அதிகாரி லாரா பெர்ஜானோ முதல்வர் ஸ்டாலினைசந்தித்து பேசினார் இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழகத்தில் உள்ளதுஎன்பதையும், தொழில் வளர்ச்சியைஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்திய முதல்வர், அபர்ட்டிஸ் நிறுவனம்தமிழகத்தின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்புகளின்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்