சென்னை: லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ரூ.34.11 கோடிசொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரூ.65 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சென்னை, கோவையில் உள்ளலாவண்யா கோல்டு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் கடந்த 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.இதில் பல்வேறு முக்கியஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதில் லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனம், வெளிநாடுகளில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதுதெரியவந்தது. பழங்கால நகைகள், தங்க நகைகளைதயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கி, அந்ததொகையை லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, லாவண்யா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள், தங்க கட்டிகள்,நகைகளை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து, கிரிப்டோ கணக்குகள் மூலம் வருமானத்தை காட்டியிருப்பதும், அந்த வருமானத்தில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருப்பதாக கணக்குகள் காட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ், இந்நிறுவனத்துக்குசொந்தமான ரூ.34.11 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago