சென்னை: வழக்கை திரும்பப் பெறுவது என முடிவு எடுத்தால் அதற்காக அரசு யாரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தனுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணாசாலையை ஒட்டியுள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம்பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தனிநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டது.
பின்னர், இந்த ஆணையத்தை கலைத்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, முந்தைய அதிமுகஆட்சியில் இது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்தது. இந்த உத்தரவை எதிர்த்துமுந்தைய அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற தற்போதைய அரசுமுடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கில் தன்னையும் இடையீட்டு மனுதாரராக இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்தன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா, நிராகரிப்பதா என்பது தொடர்பான விசாரணை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அரசியல் உள்நோக்கம்: அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவது எனஅரசு ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டது. கடைசி நேரத்தில் இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என இடையீட்டு மனுதாரர் கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதற்கு முன்பாகவே அவர் கோரியிருக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அரசுக்கு முழு உரிமை உள்ளது’’ என வாதிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக முடிவு செய்துவிட்டால் அதற்கு எதிர்மனுதாரர்கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. இங்கே மூன்றாவது நபர் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது.
முந்தைய அதிமுக ஆட்சியிலும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் நிலுவையில் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வாக்கி - டாக்கி கொள்முதல் தொடர்பாகவும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில், அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது’’ என்றார்.
ஜெயவர்தன் தரப்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘பொதுநலன் தொடர்பான இந்தவழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? தற்போது இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவதற்கு அரசு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் இந்த வழக்கில் எங்களையும் இணைக்கக் கோருகிறோம்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவது என அரசு முடிவு செய்துவிட்டால் அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? என ஜெயவர்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஜெயவர்தன் தரப்பில், இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும், 2023 ஜூலையில்தான் இந்த வழக்கை வாபஸ் பெறுவது என அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு முன்பாக வாபஸ் பெறும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதால் இந்த வழக்கில்தங்களை இணைக்கக் கோரவில்லை என்றும் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், விசாரணையை பிப்.6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago