காரைக்காலுக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை தமிழகம் சரியாக அளிக்க வேண்டும். அதனைக் கண்காணிக்க குழு வேண்டும். அதேநேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுச்சேரி விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
புதுச்சேரி, தமிழக விவசாயிகள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளது. காரைக்காலுக்கு 9 டிஎம்சி வேண்டும் என்று கேட்டிருந்தோம். தற்போது வந்துள்ள இறுதித் தீர்ப்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தண்ணீர் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
காரைக்காலுக்கு அளிக்க வேண்டிய நீரை தமிழகம் சரியாக அளிக்க வேண்டும். அதனைக் கண்காணிக்க குழு வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது கட்டாயமாகும். கடந்த ஆண்டுகளில் தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீர் அளிக்காததால் தமிழகமும், புதுச்சேரியும் பாதிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலுக்கான 7 டிஎம்சியை மாதாந்திர அடிப்படையில் உரிய காலத்தில் அளித்தால் காரைக்கால் செழுமையடையும். விவசாயத்துக்கு 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு நிலம் காரைக்காலில் உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது'' என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago