தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக, 9 நாட்கள் சிங்கப்பூர் - ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். பின்னர் ரூ.3,233 கோடி என்று அதிகரித்து புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதன்மூலம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கெனவேமேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன, எத்தனைபேருக்குவேலை கிடைத்தது என்ற விவரம் இதுவரை சொல்லப்படவில்லை.

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் திமுக அரசு உண்மையிலேயே தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போவது எப்போது, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எப்போது?

உண்மையில் முதலீடுகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. புதிய நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் தொழில் செய்துகொண்டிருக்கும் நிறுவனங்கள் கூடவேறு மாநிலங்களுக்கு செல்வது குறித்து யோசித்து வருகின்றன. வெறும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு, செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன, இரண்டரை ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்தவை எத்தனை, இந்த புதிய முதலீடுகளால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர், என்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதுபோலவே அரசு செலவில் இதுவரை சென்று வந்த வெளிநாட்டு பயணங்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் விவரங்களையும் வெளியிட வேண்டும். ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் தற்போது எந்த அளவில் உள்ளன என்ற விவரத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்