சென்னை: சென்னை - கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் உள்பட 8 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06035), கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில் (06036) ஆகிய 2 ரயில்களின் சேவை பிப்.6 முதல் பிப்.27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் தலா 4 சேவைகள் வழங்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரல் புவனேஸ்வருக்கு திங்கள்கிழமை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06073) சேவை பிப்.5 முதல் ஏப் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர் - சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06074) சேவை பிப்.6 முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் தலா 13 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு புதன்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06037) சேவை பிப்.7 முதல் மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மைசூர் - சென்னை சென்ட்ரலுக்கு புதன் கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06038) சேவை பிப்.7 முதல் மார்ச் 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
» 800 செவிலியர்களுக்கு அடுத்த வாரம் பணி ஆணை: அமைச்சர் தகவல்
» செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக பிப்.7 வரை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமை இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சேவை பிப்.1 முதல் மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago