கோமாவில் பாதிக்கப்பட்ட கணவரை ஜிப்மரில் அனுமதிக்காததால் பெண் தவிப்பு: அரசின் உதவியை எதிர்பார்க்கிறார்

துபாய்க்கு பணி புரியச் சென்ற இடத்தில் கோமாவில் பாதிக்கப் பட்டதால் புதுச்சேரி அழைத்து வரப்பட்டவரை ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கவில்லை. இதனால், அரசு உதவியை அவரது மனைவி எதிர் பார்க்கிறார்.

கடலூர் மாவட்டம் சிதம் பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (41). இவர், துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென மயங்கி விழுந்ததை தொடர்ந்து துபாய் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அப்போது, கோமா நிலைக்கு அவர் சென்றதால் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துச் செல்லுமாறு அவர் பணி புரிந்த நிறுவனத்திடம் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, துபாயில் உள்ள ஈமான் என்ற சமூக சேவை அமைப்பை அந்த நிறுவனம் நாடியது. கோமா நிலையில் இருந்த நடராஜன் குடும்பத்தினர் ஏழ்மை நிலையில் இருந்ததால், தமிழக அரசின் கவனத்துக்கு அவர்கள் எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து, தமிழக அரசு மறுவாழ்வுத் துறை இயக்குநரகம் எடுத்த முயற்சியால் துபாயில் இருந்து நடராஜனை அழைத்து வரை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. வியாழக்கிழமை நள்ளிரவு துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு நடராஜன் கொண்டு வரப்பட்டார். பின்னர், தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மருக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டார். ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு செயலாளர் ஹிதாயத் ஆகியோரும் வந்தனர். ஆனால், ஜிப்மர் மருத்துவமனையில் நடராஜனை அனுமதிக்கவில்லை.

இது குறித்து நடராஜன் மனைவி எழிலரசி கூறும்போது, “நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம். எங்களுக்கு இரண்டு மகன்கள். எனது ஒரு மகன் டிப்ளமோ படிக்கிறான். மற்றொருவர், கடந்த 2010ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்து விட்டார். எனது கணவர் துபாயில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் கோமா நிலையில் திரும்பி வந்துள்ளார். எனது கணவரை காப்பாற்ற பல முயற்சி எடுத்தேன். சில நல்லவர்களின் உதவியால் இந்தியாவுக்கு அவர் திரும்பினார். ஜிப்மருக்கு அழைத்து வந்தோம்.

ஆனால், ஜிப்மரில் எனது கணவரை அனுமதிக்க வில்லை. பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டு, ‘உடல் செல்கள் செயல் இழந்து விட்ட தால் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருப்பார். வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்’ என ஜிப்மரில் கூறி விட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை தந்தால் எனது கணவரை காப் பாற்ற முடியும் என்று நம்புகிறேன். ஜிப்மரில் அனுமதிக்காததால் என்ன செய்வது என்றே தெரிய வில்லை. தற்போது, அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளோம். தமிழக அரசிடம் உதவி கேட்டுள் ளோம். யாராவது எங்களுக்கு உதவுங்கள்” என்று வேதனையுடன் கூறினார்.

ஈமான் அமைப்பைச் சேர்ந்த ஹிதாயத் கூறும்போது, “தமிழக அரசு கவனத்துக்கு இந்த விசயத்தை எடுத்து சென்றிருக் கிறோம். நிச்சயமாக அரசு உதவும் என்று நம்புகிறோம். தமிழகம் வந்து குடும்பத்தினரை பார்த்த பிறகு அவரது உடலில் மாற்றம் தெரி கிறது. மனைவி, மகனை பார்த்ததும் கண்ணீர் வடித்தார். துபாயில் 12 மாதங்களாக மருத்துவமனையில் அவரை வைத்து சிகிச்சை அளித் தனர். இங்கு 12 மணி நேரம் கூட பார்க்கவில்லை என்பது வேத னையாக உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்