ஸ்டாலின் மீதான சொத்து அபகரிப்பு வழக்கு ஒத்திவைப்பு

By எம்.சண்முகம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் மீதான சொத்து அபகரிப்பு வழக்கு விசாரணை ஜூலை 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார், வேணுகோபால் ரெட்டி ஆகியோருக்குச் சொந்தமான 2.5 கிரவுண்டு நிலத்தை ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ஸ்டாலின் நண்பர் ராஜாசங்கர் ஆகியோர் அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரசம் செய்யப்பட்டது.

இதுகுறித்த மனுவை ஏற்று ஸ்டாலின் மீதான புகாரை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. வேணுகோபால் ரெட்டியின் வழக்கறிஞர் அசோக் தேசாய் இந்த வழக்கு குறித்த விவரங்களை படித்து வாதிட அவகாசம் கோரி கடிதம் தாக்கல் செய்தார்.

தமிழக அரசு சார்பில், வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜரானார். இருதரப்பும் ஒப்புக் கொண்டதையடுத்து, வழக்கின் விசாரணை நீதிமன்ற கோடை விடுமுறைக்குப் பின், ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்