நா
ட்டின் முதலாவதும், முதன்மையானது மான நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்துக்கு (Nilgiri Biosphere Reserve) தற்போது வயது 30. மனிதனும், பல்வேறு உயிர்களும் இணைந்து வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு என்ற அடிப்படையில், யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டதுதான் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். தற்போது, நாட்டில் 14 உயிர்ச்சூழல் மண்டலங்கள் உள்ளன.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என 3 மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் 5520 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். இதில், அதிக அளவாக தமிழகத்தில் 2538 சதுர கி.மீ., கர்நாடகத்தில் 1524 சதுர கி.மீ., கேரளாவில் 1455 சதுர கி.மீ. உள்ளடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் முக்கியம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்துக்கு, வன அழிப்பு உட்பட பல பிரச்சினைகளால் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து போராடி வெற்றியும் கண்டவர்தான் எஸ்.ஜெயசந்திரன். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர். 1990-ல் தமிழக பசுமை இயக்கம் தொடங்கி, மர மாஃபியா கும்பலுக்கு எதிராக போராடத் தொடங்கினார். 30 ஆண்டுகள் கடந்தும், இவரது சுற்றுச்சூழல் பயணம் தொடர்கிறது.
மேட்டுப்பாளையம் - முள்ளி - உதகை புதிய சாலைக்கு எதிராகவும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றம் பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் காப்பகம் வழியாக ஹாசனூர் - கொள்ளேகால் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு எதிராகவும் நீதிமன்றத்தை நாடினார். கல்லாறு - ஜக்கனாரை யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் வனத்தை பாதுகாத்தார்.
2009-ம் ஆண்டு சீகூர் வனத்தில் நியூட்ரினோ திட்டம் கொண்டுவர மத்திய அரசு முனைந்தபோது, அத்திட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் முன்னெடுத்ததால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து திட்டம் வெளியேறியது. இளைஞர்களை ஊக்கப்படுத்தியும், தன்னுடன் இணைத்தும் போ ராடி தீர்வு காண்பவர்.
ஜெயசந்திரனை ‘சேங்சுரி ஏசியா’ வன உயிரின பத்திரிகை பாராட்டி உள்ளது. அவரது சேவையை அங்கீகரித்து 2017-ம் ஆண்டுக்கான வன உயிரின சேவை விருது வழங்கி இருக்கிறது. அப்பத்திரிகை ஆசிரியர் பிட்டு சேகல் கூறும்போது, ‘வேட்டைகளை முடக்கி, வனப் பொருட்களை பறிமுதல் செய்ய கேரளா மற்றும் தமிழக வனத்துறைகளுக்கு ஜெயசந்திரன் உதவியுள்ளார். வேட்டைக்காரர்களை சரணடைய செய்து, அவர்களுக்கு மறு வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இத்தகைய மறுவாழ்வு பெற்றவர்கள், தற்போது வனக்குற்றங்கள் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கின்றனர்’ என்றார் பெருமையுடன்.
காப்பீட்டு நிறுவன ஊழியரான இவர், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு போராடவே, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் பணியை துறந்தார்.
‘இந்த இயற்கை, நமக்கு அளிக்கப்பட்டுள்ள கொடை. அதை பாதுகாத்து, அடுத்த சந்ததிக்கு திரும்ப கொடுக்க வேண்டும். அதை பாதுகாக்க போராடுவதை தவிர வழி இல்லை’ என்கிறார் ஜெயசந்திரன்.
இயற்கையாக தோன்றும் பல போராளிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் இயற்கைக்காக தோன்றிய போராளியாகவே வாழ்கிறார் அவர். ஊருக்கு ஊர் எல்லையில் சாமி இருக்கும். அது ஊரை காத்து நிற்கும் என்பது ஐதீகம். இயற்கையை காத்து எல்லைச் சாமியாக நிற்கிறார் ஜெச்சந்திரன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago